தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில் மற்றும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: சென்னை - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை ...

தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.எனவே இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை மாதத்தில் முடிந்தது.

இதையடுத்து, பயணிகள் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.


எனவே இதன்பேரில், மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 2 ரயில்களில் பண்டிகைக்கு சென்றுவர பொருத்தமான ஓரிரு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

எனினும், இந்த 2 ரயில்களும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. எனவே, கூடுதல் சிறப்பு ரயில் மற்றும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.