தமிழகம், புதுச்சேரியில் மொகரம் பண்டிகையை ஒட்டி பொது விடுமுறை

சென்னை: இன்று மொகரம் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதை ஒட்டி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 12 மாதங்கள் குறிப்பிடப்படுவதை போல, இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.

ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 9ம் தேதி அதாவது இன்றைய தினம் கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த பண்டிகையையொட்டி, தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் வரும் 20 ம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதேபோல, குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது.


அதன்படி, மொஹரம் பண்டிகையான இன்றும் பங்குச் சந்தைகள் இயங்காது. இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை முதல் பங்கு சந்தைகள் வழக்கம் செயல்படும்.