புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் .. ஒரு மணி நேரம் நீட்டிப்பு

புதுச்சேரி: 2 மணி வரை அனுமதி ... புதுச்சேரியில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி கொண்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளி விளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு இடையே புதுச்சேரியில் இரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் வழிபாட்டுத் தளங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டித்து 2 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கலெக்டர் வல்லவன் அவர்கள் அறிவித்துள்ளார்.