ராணி எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின், இறப்புக்கு வயது முதிர்வுதான் காரணம் என்று அவரது இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் நேஷனல் ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஆவணம், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், பிற்பகல் 3:10 மணிக்கு இறந்ததாகக் கூறுகிறது. ராணி, பிரித்தானிய நேரம் (காலை 10:10 மணி) செப்டம்பர் 8ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பாலேட்டரில் உள்ள பால்மோரல் கோட்டையில் உயிரிழந்தார்.

இறப்புக்கான காரணம் முதுமை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ராணியின் மகள் இளவரசி அன்னே கையெழுத்திட்டுள்ளார்.

70 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் அமைதியாக காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.