அதிவேக ரயில்கள் இயக்க ரயில்வே திட்டம்

இந்தியா: அதிவேக ரயில்கள் .... ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து மக்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் பயணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுப்பணித்துறையான ரயில்வேயில் போக்குவரத்தை மேம்படுவதற்காக தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் திட்டமான வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய வழித்தடங்களில் பயணிக்கிறது.

மேலும் இது போன்ற பல அதிரடியான திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது, வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வழிப்பாதைகளில் மற்றும் சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா, திருவனந்தபுரம் – மங்களூரு போன்ற பாதைகளிலும் 160 கிமீ என்ற அதி வேகத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கைகள் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர், இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.