வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மூன்று நாட்கள் கொண்ட இந்த தொடரின் கடைசிநாள் கூட்டம் இன்று பெறுகிறது.

இன்றய கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார்.