டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் ஆப்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு

இந்தியா: இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் பெற முடிகிறது. அந்த வகையில் டிஜிட்டல் முறையில் செயலிகள் மூலமாக மிக சுலபமாக கடன்களை பெற முடிகிறது. டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது.

இதில் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் என வகைப்படுத்துவர். இதையடுத்து சட்டப்பூர்வ/ஒழுங்குமுறை விதிகளின்படி கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படும்.

ஆனால் இவை இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்பட முடியாது. இதை தொடர்ந்து, சட்டப்பூர்வ / ஒழுங்குமுறை விதிகளின் வரம்பிற்கு வெளியே கடன் வழங்கும் நிறுவனங்களாக வகைப்படுத்துவர். தற்போது கடன் வழங்குவதில் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த புதிய விதிமுறைப்படி, கடன் சேவை வழங்குநரின் அல்லது மூன்றாம் தரப்பினர் கடன் வாங்குபவர் மற்றும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. அத்துடன் passthrough/ pool account இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

மேலும் அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் பீஸ் மற்றும் சார்ஜஸ்கள் பேங்க் மற்றும் நான்-பேங்க்ஸால் செலுத்தப்பட வேண்டும். இதேபோன்று கடன் வாங்குபவர்கள் கடன் ஒப்பந்தமிடும் முன் கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட் வழங்கப்பட வேண்டும். இதை அடுத்து அத்துடன் கடன் வரம்பை கடன் வாங்குபவர் அனுமதியின்றி உயர்த்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் RBI-ஆல் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் டிஜிட்டல் கடன் தொடர்பான புகார்களை கையாள அதிகாரிகள் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.