மறு சீரமைப்பு திட்டங்கள்... இஸ்ரேலில் ஆயிரக்கணக்காக மக்கள் போராட்டம்

இஸ்ரேல்: இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைப்பதுடன், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்ப பிரதமர் நெதன்யாகு சட்டத்தை திருத்தி இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, 10வது வாரமாக அங்கு போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல் அவிவில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.