100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை கலிபோர்னியாவில் பதிவு

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகளவு அதிகபட்ச வெப்பநிலை கலிபோர்னியாவில் பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் Furnace Creek பகுதியில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

1913ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னர் உலகில் வேறெந்த பகுதியிலும் நிகழாத வண்ணம் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது என லாஸ் வேகாஸ் தேசிய வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பதிவான இந்த உயர்வெப்பநிலை ஆரம்பம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண பள்ளத்தாக்கு பகுதியில் 1913ம் ஆண்டு ஜூலையில் 134 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவானதே அதிகபட்சமாக உள்ளது.