தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...
தமிழகத்தில் சமீபத்தில் பருவமழை தொடங்கியது. அதிலிருந்தே பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால், நீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதீத கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நேற்று காலை நிலவரப்படி 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.