449 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த விவரங்கள் வெளியீடு

இந்தியா: மாணவர்களுக்கான தேர்வு மைய விவரங்கள் வெளியீடு .. 2023 - 24 ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம். நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனை அடுத்து இதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த ரூ.40ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர்( தேர்வு) சாதனா பிரஷார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “ தேசிய தேர்வு முகமை 2023ம் ஆண்டுக்கான, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கான மையங்கள் 499 நகரங்களில் அமைகிறது.

மேலும் இந்தியா தவிர வெளிநாடுகளில் 14 நகரங்களில் மே 7-ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கும். நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியர், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளவும் அல்லது சரிபார்த்துக் கொள்ளவும், www://neet.nta.nic.in என்ற இணைய தளத்தில், தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி போன்றவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது வெளியிட்டுள்ள விவரங்கள் தேர்வு எழுத உள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இல்லை. மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நகரங்கள் மற்றும் மையங்கள் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கவே வெளியிடப்பட்டுள்ளது. நீட் 2023க்கான ஹால்டிக்கெட்டுகள் பின் வழங்கப்படும். மேற்கண்ட தேர்வு நடக்கும் நகரங்கள் தொடர்பான விவரங்களை சரிபார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ இயலாத மாணவ-மாணவியர் 011-40759000 என்ற எண்ணிலோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். தேசிய தேர்வு முகமை பதிவேற்றும் புதிய தகவல்களை அப்போதைக்கு அப்போது தெரிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து தேசிய முகமையின் இணை தளத்தை கண்காணித்து வர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.