அடுத்த 5 நாட்களுக்கு வானிலை குறித்த அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை நிம்மதி அடைய செய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.

எனவே அதன்படி நேற்று வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் ‘பிப்பர்ஜாய்’, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்தில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 280 கிமீ தொலைவில்,

தேவ்பூமி துவாரகா இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 290கிமீ தொலைவில், போர்பந்தரில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 340 கிமீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா கட்ச் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் நாளை மாலை மிகத்தீவிர புயலாக, கராச்சி-ஜக்காவு துறைமுகம் அருகே கரையை கடக்க இருக்கிறது. அதனால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இன்று (முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகள், சௌராஷ்டிரா கட்ச் கடற்கரை பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் அத்தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடலில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கடைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
a