பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அறிக்கை

நியூயார்க்: தொழிலாளர் பாதுகாப்பு குழு அறிக்கை... அமெரிக்காவில் ஆண்டுக்கு 32 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 95 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓட்டல்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களில் வாடிக்கையாளரிடம் கேட்காமல் பிளாஸ்டிக் பாத்திரங்கள், கரண்டி, கத்தி போன்றவற்றை வழங்கக் கூடாது.

இதை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறினார்.