உக்ரைன் நிலைகள் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்

உக்ரைன்: உக்ரைன் நிலைகள் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் டாங்கிகள், கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவும் தன் பங்குக்கு அதிரடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது. உக்ரைன் நிலைகள் மீது தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்நாட்டின் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை தகர்த்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைனின் ஆதரவு நாடுகள் வழங்கிய லியோபர்டு ரக டாங்கிகள், பிராட்லி போர் வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகர்த்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கு அத்தாட்சியாக உக்ரைன் டாங்கிகள், கவச வாகனங்கள் போன்றவை ட்ரோன்களை மூலம் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. அந்தக் காட்சிகளில் உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் உருக்குலைந்து கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.