கொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; விஞ்ஞானிகள் தகவல்

கொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து குறித்து கனடா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கனடாவில் ஜிசி 376 என்ற புதிய நோய்த்தடுப்பு மருந்து தற்போது பூனைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பூனைகள் உடலில் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டு பின்னர் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இது வெற்றி பெற்றால் இதனை கொரோனா நோயாளிகளுக்கும் செலுத்தலாம் என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நேச்சுரல் கம்யூனிகேஷன்ஸ் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை கனடாவின் ஆல்பர்ட்டா பல்கலை., விஞ்ஞானி ஜான் ரீமிக்ஸ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு பரிசோதனை முடிந்த பின்னர் இதனை மனிதர்களுக்கு செலுத்தலாம் என இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ள கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு வெளியான மூச்சுக்குழாய் பாதிப்பு நோய்க்கு (சார்ஸ்) இந்த தடுப்பு மருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டது. சார்ஸ் நோய் அப்போது கொரோனாவைப் போலவே பலரை பாதித்து வந்த நிலையில் இந்த தடுப்பு மருந்து ஆரம்ப நிலையில் இருந்த நோயாளிகள் பலரை குணப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சுவாசக் குழாயை பாதிக்கும் நோய் என்பதால் இதனையும் இந்த தடுப்பு மருந்து குணப்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.