கர்நாடகாவில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் புதிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கர்நாடகா : மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ... கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று கர்நாடகா அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்காக 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழுக்களை பள்ளிக்கல்வித்துறை நியமனம் செய்துள்ளது.

இதையடுத்து அதன்படி, கன்னட மொழி பாட திட்டத்தில் அஞ்சப்பா, ஹெச்.எஸ் சத்யநாராயணன், மஞ்சன்னா ஆகிய ஆசிரியர்களும், சமூக அறிவியல் பாட திட்டத்திற்கு ஓய்வுபெற்ற பேராசிரியர் கிரண் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று விரிவுரையாளர் அஸ்வத் நாராயண் அவர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் இது தவிர மீதமுள்ள பாடத்திட்டத்திற்கும் உதவி பெற்ற பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இப்புதிய பாடத்திட்டங்களை தயார்படுத்துவதற்கு வல்லுநர்களுக்கு 3 மாதம் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.