மாபெரும் வாசிப்பு இயக்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை தொடங்கிறார்

சென்னை: மாபெரும் வாசிப்பு இயக்கம் - நாளை தொடக்கம் ... மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 10 கோடியில் மாபெரும் வாசிப்பு இயக்கம் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார்.

இதனை அடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதி பள்ளி கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பள்ளி என்றால் நேராக வகுப்பறைக்கு சென்று பாடங்களை கவனிப்பது , பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வது என்பதோடு மாணவர்கள் இருக்கக் கூடாது.

மாணவர்கள் பள்ளியில் உள்ள நூலகத்தில் 20 நிமிடங்கள் ஆவது செலவிட வேண்டும் என்பது போல் தான் பாட வேளைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு சொல்ல கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வாசிப்பு இயக்கம் தொடங்கப்படுகிறது என்றார்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடையே நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, திருச்சியில் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.