உத்தரபிரதேசத்தில் 35 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் விடுமுறை

உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக UP PET 2023 தேர்வு வருகிற அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்தேர்வு நடைபெறுவதால் உத்தரபிரதேசத்தில் 35 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட நாட்களில் கூடுதல் தேர்வுகள் எதுவும் திட்டமிடப்பட மாட்டாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


இதனை அடுத்து இது குறித்து வெளியான அறிவிப்பில், சில பள்ளிகளில் UP PET 2023 க்கு நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களாக செயல்படும் என்பதால் இத்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வை எழுத 20 லட்சத்துக்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் எனவும், மாணவர்கள் தங்களின் சேர்க்கை அட்டை மற்றும் சரியான அடையாள அட்டையுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.