டெல்லியில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு இந்த தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

டெல்லி: பள்ளிகள் மீண்டும் திறப்பு .... டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த பிரச்சனைகள் கடந்த சில வருடங்களாக எழுந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் நிலைமை மிகவும் கையை மீறி சென்று விட்டது. காற்றின் தரத்தை குறிப்பிடும் அளவீடு AQI உச்ச நிலையை அடைந்து சுவாசிப்பதற்கான காற்று மோசமான நிலையில் இருந்தது.

இதனால் மக்களின் நலன் கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்று மாசுப்பாடு சற்று குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. இதனால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வரும் 9ம் தேதியான புதன்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் .

இதனையடுத்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல், 50% அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த WFH உத்தரவு நீக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.