ஆர்க்டிக் கடல் பகுதியில் பிரமாண்ட பனிப்பாறை உடைந்ததாக விஞ்ஞானிகள் தகவல்

விஞ்ஞானிகள் தகவல்... ஆர்க்டிக் பகுதியில் 113 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பனிப்பாறை கடந்த மாதம் உடைந்து கடலில் மூழ்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர்கள், கடலில் பனிப்பாறை மூழ்கிய செயற்கைக் கோள் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வெப்ப நிலை காரணமாக சிறிது சிறிதாக உருகி வந்த அந்த பனிப்பாறை கடந்த மாதம் 27ந்தேதி முற்றிலுமாக உடைந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆர்க்டிக் கடல் பகுதியில் ஏற்பட்ட அளவுக்கதிகமான வெப்ப மாற்றமே பனிப்பாறை உடைந்ததற்கான காரணம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.