10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க படவுள்ளது

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6 -ம் தேதி முதல் 10 ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தேர்விற்கு 9,76,789 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், தமிழகத்தில் இருந்து 9,22,725 பேர், புதுச்சேரியில் இருந்து 15,566 பேரும், தனித்தேர்வர்கள் 37,798 பேரும் தேர்வு எழுதி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பத்தாம் வகுப்பு ஆங்கில மொழி பாடத் தேர்வில் வினா எண் 4, 5, 6 ஆகிய 1 மதிப்பெண் வினாவும், இரண்டு மதிப்பெண் கொண்ட 22 வது வினா எண்ணும் தவறுதலாக கேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த தவறுதான வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மாநில பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம் தேர்வு துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. இக்கோரிக்கையை ஏற்ற தேர்வு துறை தவறுதலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 5 மதிப்பெண்களை முழுமையாக கருணை அடிப்படையில் வழங்க முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதே போன்று முன்னதாக 12-ம் வகுப்பு கணித தேர்வு தவறாக கேட்கப்பட்ட ஐந்து மதிப்பெண்களுக்கு கேள்விக்கு ஐந்து மதிப்பெண்கள் தேர்தல் இயக்குனர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இந்தாண்டு மே 17-ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.