சூடானில் உயிரியல் ஆய்வகம் கைப்பற்றல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சூடான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை... சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வகத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றி உள்ளதால், அங்கிருந்து ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய சூடானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத், ஆய்வகத்துக்குள் வல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உயிரியல் பொருட்கள் மற்றும் ஆய்வகத்தில் பொருட்களையும் போராட்டக்காரர்கள் பாதுகாப்பாக வைக்காமல் உள்ளதாக தெரிவித்தார்.

ஆய்வகத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், ரத்த கையிருப்புகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக ஆய்வக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.