காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட உள்ளார் .. மருத்துவமனை நிர்வாகம் தகவல்


சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று அதிகாரி செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதாவது , இன்று காலை 10 மணிக்கு மேல், நீதிமன்ற தீர்ப்புக்கு பின், காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட உள்ளார்;காவேரி மருத்துவமனையில் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளையும் மருத்துவர்கள் வழங்கி உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளதால், புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேட்டு எண் வழங்கப்பட்டு உள்ளது;சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும்; பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்றால், புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிட்டு உள்ளது.