இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் சேவைத் துறை 50%க்கு மேல் பங்கு வகிப்பு

இந்தியா: 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் சேவைத் துறை வளர்ச்சி ... ஒவ்வொரு மாதமும் சேவைத் துறை செயல்பாடுகள் பிஎம்ஐ குறியீடு வழியாக அளவிடப்படுகிறது.

எனவே அதன்படி கடந்த ஜூன் மாதம் 58.5 சதவீதமாக இருந்த சேவைத் துறையின் பிஎம்ஐ குறியீடு, ஜூலை மாதத்தில் 62.3 சதவீதமாக அதிகரித்துள்ள்து. இது 2010 ஜூன் மாதத்துக்குப் பிறகு (13 ஆண்டுகள்) சேவைத் துறையின் புதிய உச்சமாகும்.

இதனை அடுத்து இது பற்றி சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.


தற்போது சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதிலும், இந்தியாவில் சேவைத் துறை வளர்ச்சி குறிப்பிடும்படியாக உள்ளது.

மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்” என தெரிவித்துள்ளது.