அமெரிக்காவில் யூடியூபர் மீது நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

அமெரிக்கா: யூடியூபர் மீது துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில், எரிச்சலூட்டும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபரை வயிற்றில் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

21 வயதான Tanner Cook, டாக்சி ஓட்டுநர் மீது வாந்தி எடுப்பது, சூப்பர் மார்கெட்டில் திருடுவது... என விதவிதமாக பிராங் வீடியோக்களை எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றிவந்தார்.

விர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஷாப்பிங் மால் food கோர்டில், ஆலன் கூலி என்பவரிடம் பிராங்க் செய்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஆலன் கூலி தனது துப்பாக்கியால் டேனர் குக்கை சுட்டார். வயிற்றில் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்த குக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுபோன்ற பிராங்க் வீடியோ எடுப்பவர்களால் பலரும் மிகுந்த வெறுப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதற்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு உதாரணம் என்று மக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டது.