சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதல்முறையாக பெண்ணுக்கு தூக்குத்தண்டனை

சிங்கப்பூர்: பெண்ணுக்கு தூக்கு தண்டனை... சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாகப் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீட்டில் 31 கிராம் ஹெராயின் வைத்திருந்ததற்காக சரிதேவி ஜமானி என்ற சிங்கப்பூர் நாட்டு பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துபவர்களுக்கும், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்துபவர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

மனிதர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கி தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு சிங்கப்பூர் அரசுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.