நடிகை சித்ரா மரணத்திற்கு பாடகி சிவாங்கி இரங்கல் பதிவு

ஏன் இவ்வாறு செய்தீர்கள் சித்து அக்கா என்று பாடகி சிவாங்கி வேதனையுடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .

மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் சித்ராவுடன் பல ஷோக்களில் இணைந்து பணியாற்றிய பாடகியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சிவாங்கி கண்ணீருடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

சித்ராவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அக்கா நாம் நேற்று தான் ஆடியும், பாடியும் மகிழ்ச்சியாக இருந்தோம் .24 மணி நேரம் கூட ஆகவில்லை. எங்களை விட்டு போய் விட்டீர்கள் .ஏன் இவ்வாறு செய்தீர்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சித்து அக்கா என்று குறிப்பிட்டுள்ளார்.