வீடு தேடி வரும் ரூ.299க்கு ஸ்மார்ட் பைக் திட்டம்; இது சென்னையில்!

ரூ.299க்கு ஸ்மார்ட் பைக் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அட ஆமாங்க உண்மைதான். ஆனால் இது 15 நாட்கள் கட்டணம்.

ரூ.299 செலுத்தி, ஸ்மார்ட் பைக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று 7 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். 15 நாட்களுக்கு கட்டணமாக ரூ.599ம், 30 நாட்களுக்கு கட்டணமாக ரூ.999ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியுடன் இணைந்து ஸ்மார்ட் பைக் நிறுவனம் இத்திட்டத்தை முதல் கட்டமாக சென்னையில் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு படிப்படியாக தளர்வுகளுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்நிலையில், பொது போக்குவரத்து பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் வாடகை அடிப்படையில் ஸ்மார்ட் பைக்கை வீட்டிற்கு எடுத்து செல்லும் திட்டத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்மார்ட் பைக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் பொதுமக்கள் 044 - 26644440 என்ற எண்ணிக்கை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்துக் கொள்ளும் பொதுமக்களின் வீட்டிற்கே, ஸ்மார்ட் பைக் நிறுவன அதிகாரிகள் வந்து வாகனத்தை வழங்குவார்கள்.

இதற்காக, குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பொதுமக்கள் செலுத்த வேண்டும். அதன் பின்னர், அவர்கள் தேர்ந்தெடுத்த காலம் வரையில் வாகனத்தை வீட்டிலேயே வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அவர்களே வந்து சைக்கிளை பெற்று கொள்வார்கள்.

தற்போது சென்னையில் ஷெனாய் நகர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை என 33 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.