மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் அரையாண்டு விடுமுறை

சென்னை; தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அரையாண்டுத்தேர்வு அதாவது 2-ம் பருவத்தேர்வு நடைபெறும். எனவே அதன் படி நடப்பு ஆண்டும் அரையாண்டு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து இத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த மாதமே வெளியிடப்பட்டது. அதன் பிறகு வகுப்பு வாரியாக கால அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி வரும் 15ம் தேதி முதல் 6 -12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் 23ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வானது 6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு காலையிலும் 7, 9, 11ம் வகுப்புகளுக்கு மாலையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் நடப்பு ஆண்டு எவ்வித குளறுபடிகளும் நடக்காமல் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுகள் 23ம் தேதியுடன் முடிவடைந்த பிறகு 24ம் தேதி முதல் 2023 ஜனவரி 1ம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.