வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

தென்கொரியா: மீண்டும் ஏவுகணை சோதனை... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால், பொருளாதாரச் சிக்கல்கள், உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றில் சிக்கித் தவிக்கிறது.

இருப்பினும், அது அமெரிக்க ஆதரவு அண்டை நாடான தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், வடகொரியா தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை. சமீபத்தில் அமெரிக்காவையும் மிரட்டியது.

இந்நிலையில் வடகொரியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள நம்போநகர் பகுதியில் இன்று வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.