தென் மாநிலங்களில்தான் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம்

சென்னை: வடமாநிலங்களை விட தென் மாநிலங்களில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கேரளாவில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு, தமிழகத்தில் 22.3 சதவீத மக்களும், ஆந்திராவில் 21.1 சதவீத மக்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, கோவாவில் 22.7 சதவீதம் பேரும், புதுச்சேரியில் 22 சதவீதம் பேரும், லட்சத்தீவில் 21.9 சதவீதம் பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற வடமாநிலங்களில் இந்த பாதிப்பு 12 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தென்னிந்திய உணவுப் பழக்கவழக்கங்களும் அதனுடன் தொடர்புடைய மரபணுக்களும் சர்க்கரை நோயின் அதிகரிப்புக்குக் காரணம்.

அதேபோன்று உடற்பயிற்சியின்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் முக்கியமானதாக கூறப்படுகிறது.