வைகாசி விசாகத்தையொட்டி தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில், 155 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நெல்லை:

வைகாசி விசாகம் முருகன் கோவில்களில் மிகவும் விமர்ச்சியாக கொண்டாப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே பக்தர்களின் பயண வசதிக்காக ஏதுவாக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு நெல்லைக்கு வரும்.

இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சென்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம், பரமகுடி, சங்கரன்கோவில், கழுகுமலை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.