மும்பையில் விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு மும்பை -கொங்கன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை - கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் மும்பை சென்ட்ரல்-சாவந்த்வாடி, பாந்த்ரா-சாவந்த்வாடி, பாத்ரா-குடால் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு கணபதி சிறப்பு ரயில்களை இயக்க தயாராக இருந்த போதிலும் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மும்பை -சாவந்த்வாடி, லோக்மான்யதிலக் -குடால் , ரத்னகரி- சாவந்த்வாடி ஆகிய பகுதிகளுக்கு வரும் 15 ம் தேதி முதல் செப்-5 ம் தேதி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

பயணத்தின் போது பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது எனவும் மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.