ஹால்தியா – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

இந்தியா: இந்தியாவில் ரயில்வே பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

எனவே இந்த பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள்.இதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம், செல்லும் வழிகள் பற்றிய அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக தற்போது ஹால்தியா – பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இச்சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக ஜன.7ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் நாளை காலை காலை 4.50 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.