தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் சிறப்பு ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து

சிறப்பு ரயில்கள் ரத்து... தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் பல்வேறு நகரங்களிடையான 7 சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் பல்வேறு நகரங்களிடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா பரவலைத் தடுக்கச் சிறப்பு ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து இந்தச் சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே ஆகஸ்டு 31 வரை ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் செப்டம்பர் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.