இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இங்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ...முருகனுக்கு மிகவும் உகந்த நாளான ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் நேத்திக்கடனை செலுத்துவதற்காக செல்கின்றனர்.

இந்தநிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இதனால், வெளியூரிலிருந்து முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக ஆடி கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலில் கூடுதல் விசேஷம் என்பதனால் திருத்தணிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.