தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை கவர நடவடிக்கை... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை கவர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு இன்று (ஜனவரி 13) பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை கவர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற, பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதை நிறைவேற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த இலக்கை நோக்கிய பயணமாக, துபாய் உள்ளிட்ட இடங்களில் பல முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன. மேலும், உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்குச் சென்றது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை அடையவும், 2024 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு”, மேலும் பலர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், பெரிய ஊராட்சி ஒன்றிய சாலைகளை பலப்படுத்தவும், தரத்தை மேம்படுத்தவும், 2 ஆண்டுகளில் முதல்கட்டமாக, 10,000 கி.மீ., துாரத்தில், “பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்” என்ற புதிய திட்டத்தை, அரசு செயல்படுத்தவுள்ளது. 4,000 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.