இன்னும் வளரவே இல்லையே.... பாஜ பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

நீங்க இன்னும் வளரவே இல்லை என்று பாஜ குறித்து கமெண்ட் அடித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.

பாஜக டெல்லிக்கே ராஜாவாக இருக்கலாம். ஆனாலும் தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை காமராஜர் சாலையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க துவக்க விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

பாஜக டெல்லிக்கே ராஜாவாக இருக்கலாம். ஆனாலும் தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி. பாஜகவின் ஹெச்.ராஜா ஏதாவது பேசிகொண்டே இருப்பார். பாஜக திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் சவாரி செய்ய முடியும். விஜய் ரசிகர்கள் சின்னபிள்ளைகள். விஜய், தமிழர். நல்ல நடிகர் அவ்வளவுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.