நகரத்திற்கு வெளியே உணவகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு

கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... ஒன்ராறியோ தெற்கில் நகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதிலிருந்து தடுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவின் ஸ்ட்ராட்போர்டில் நான்கு உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் வைத்திருக்கும் ராம்ஷாகில் இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்தில் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டபோது இந்தக் கொள்கையை முதலில் அறிமுகப்படுத்தியது.

இந்த கோடையில் தொற்றுநோய் குறைந்து வருவதால் மெதுவாக அதைத் திரும்பப் பெற்றது.

இப்போது கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ரொறன்ரோ, யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்கள் மற்றும் ஒட்டாவாவில் மாகாணம் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாக ராம்ஷாகில் உரிமையாளர் ஜெஸ்ஸி வோட்டரி கூறினார்.