CBSE பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2024 -ம் கல்வி ஆண்டுக்கான CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்விற்கான விண்ணப்ப பதிவு பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இன்று முதல் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வரையிலும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் தற்போது இருந்தே cbse.gov.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்க துவங்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, மாணவர்கள் 5 பாடங்களுக்கு ரூ.1500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க எந்த காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, CBSE தேர்வு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படலாம் எனவும், தேர்வுக்கான தேதி பற்றிய அறிவிப்பு பின்பு அறிவிக்கப்படும் எனவும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.