வாகனங்களுக்கான வரி திடீர் உயர்வு ..நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்

சென்னை : நவம்பர் 1 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான வாழ்நாள் வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்த மசோதா நிறைவேற்றம் ... தமிழகத்தில் வாகனங்களுக்கான வாழ்நாள் வரி உட்பட அனைத்து வரி வகைகளை உயர்த்துவதற்கான சட்ட திருத்தம் மசோதாவில் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, வாடகை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலா, ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ. 4900 ஆகவும், 35க்கும் மேல் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ. 3000 ஆகவும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 3000 முதல் 4000 வரையிலும் வரி உயர்த்துவதற்கு மசோதாவில் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்ட பிரத்தியேக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.6,000 வரையிலும் வரி விதிக்கப்பட்டு உள்ளது.


அதாவது, பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து 5 ஆண்டு வரியாக ரூ.1400 முதல் ரூ. 6000 வரையிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோக 1 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியும், ரூ. 5 லட்சம் வரையிலான புதிய இருசக்கர வாகனங்களுக்கு 12% வரையிலும்,

மேலும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரைவிலான புதிய இருசக்கர வாகனங்களுக்கு 18% வரையிலும், ரூ. 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு 20 சதவீதம் வரையும் வாழ்நாள் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி விதிப்பு நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.