அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடத்திய திடீர் போராட்டம்

ஜெர்மனி; ஜெர்மனியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் சிலர் அருங்காட்சியத்தில் உள்ள மோனெட்டின் ஓவியத்தின் மீது உருளைக்கிழங்கு மசியலை வீசி எறிந்தனர். உணவுக்காக நாம் போராடும்போது இந்த ஓவியத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று முழக்கமிட்டனர்.

கிளாட் மோனெட் (Claude Monet) பிரான்ஸைச் சேர்ந்த பிரபல ஓவியர். இவர் ஓவியம் ஒன்று ஜெர்மனியின் பார்பெர்னி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் போல அருங்காட்சியகம் உள்ளே வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2 பேரும் திடீரென தாங்கள் பையில் கொண்டு வந்திருந்த உருளைக்கிழங்கு மசியலை அங்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓவியத்தின் மீது வீசி எறிந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்தவர்களிடம் பேசினர்.

அப்போது, உணவுக்காக 2050இல் திண்டாடப் போகிறோம் என்று அறிவியல் உலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நாம் அது குறித்து கவலைப்பட மறுக்கிறோம். இந்த ஓவியத்தின் மீது இருக்கும் உருளைக் கிழங்கு, தக்காளி சூப் ஆகியவற்றுக்காக கவலைப்படுகிறோம். உணவுக்காக நாம் போராடும்போது இந்த ஓவியத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை.


அந்த ஓவியம் கண்ணாடியால் சூழப்பட்டு இருந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் ஓவியத்தை சேதப்படுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தகவல் எதுவும் இல்லை.