ஒரே நேரத்தில் வெயில் & மழை ... கொரோனாவுக்கு சாதகமான சூழ்நிலை

சென்னை : தமிழகத்தில் வெயில் மற்றும் மழை என மாறி மாறி வருவதால் மக்களுக்கு உடல்நலனில் புதிய சிக்கல் உருவாகும் அபாயம் .. தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் துவங்கி விட்டது. எனவே அதன் விளைவாக வெயில் பல மாவட்டங்களில் சதம் அடித்து விட்டது.

அதை தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இதனால் வெப்பத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இடையில், கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் ஆங்காங்கே குளிர்ச்சியான சூழல் ஒன்று நிலவுகிறது.

இதனால் உஷ்ணத்தின் அளவு சீராக இல்லாமல் அளவுக்கு அதிகமாக அதிகரித்து கொண்டு வருகிறது. ஏற்கனேவே கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மஞ்சள் காமாலையும் இடையிடையே குழந்தைகளை தாக்கி கொண்டு வருகிறது.

மேலும் இதனுடன் சீரற்ற வானிலையால் ஏற்படும் உஷ்ணம் மேலும் உடல் நலனை பாதிக்கும். இதனால் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுவதோடு, எளிதாக கொரோனா தொற்றிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.