தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக லண்டன் பயணம்


சென்னை: தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்பு அண்ணாமலை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு கொண்டு வருகிறார். அதேபோன்று பல்வேறு பொது மேடைகளில் பாஜக புகழ் பாடுவதுடன், திமுகவை சரமாரியாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்.

மேலும் சில நேரங்களில் கூட்டணி கட்சியான அதிமுகவையும் விட்டுவைப்பதில்லை, அவர்களையும் பற்றியும் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். இதற்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஒருபுறம், மறுபுறம் பாஜகவின் 9 ஆண்டுகால பொதுக்கூட்டம் மறுபுறம் என்று ஒரே பிஸியாக இருக்கும் அண்ணாமலை லண்டன் செல்ல இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் பற்றி அண்ணாமலை எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி பயணம் மேற்கொள்ளவிருக்கும் அண்ணாமலையுடன் யாரெல்லாம் உடன் செல்லவுள்ளனர் என்பது பற்றி எந்த தகவல் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் அண்ணாமலை அமெரிக்கா சென்றார். Fellowship படிப்பு காரணங்களுக்காக 2 வாரம் அங்கு தங்கியிருந்தார். அவருடன் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் சென்றிருந்தார். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் அண்ணாமலை இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார் குறிப்பிடதக்கது.