தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 29,268 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மாவட்ட வாரியாக 29 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 29 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 70 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்து 28 ஆயிரத்து 347 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 107
செங்கல்பட்டு - 1,239
சென்னை - 8,856
கோவை - 3,753
கடலூர் - 716
தர்மபுரி - 458
திண்டுக்கல் - 254
ஈரோடு - 807
கள்ளக்குறிச்சி - 241
காஞ்சிபுரம் - 460
கன்னியாகுமரி - 571
கரூர் - 291
கிருஷ்ணகிரி - 540
மதுரை - 606
நாகை - 361
நாமக்கல் - 703
நீலகிரி - 244
பெரம்பலூர் - 72
புதுக்கோட்டை - 215
ராமநாதபுரம் - 138
ராணிப்பேட்டை - 271
சேலம் - 1,829
சிவகங்கை - 135
தென்காசி - 125
தஞ்சாவூர் - 368
தேனி - 127
திருப்பத்தூர் - 288
திருவள்ளூர் - 1,233
திருவண்ணாமலை - 506
திருவாரூர் - 401
தூத்துக்குடி - 500
திருநெல்வேலி - 309
திருப்பூர் - 977
திருச்சி - 499
வேலூர் - 424
விழுப்புரம் - 455
விருதுநகர் - 187
விமானநிலைய கண்காணிப்பு - 2