ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க மூட்டைகளில் க்யூ ஆர் கோடை அச்சிட தமிழக அரசு முடிவு

சென்னை: தற்போது ரேஷன் கடைகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதாவது மக்கள் வீடுகளில் இருந்து ரேஷன் கடைகள் திறந்திருப்பது பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் மூலம் சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதனை அடுத்து மக்களுக்கு சரியான முறைகள் உணவுவ பொருட்கள் வழங்கப்படவில்லை என்றால் புகார்கள் தெரிவிக்க தனி இணையதளம் பக்கத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தவிர ரேஷன் கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தவிர மற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் ஊழல்கள் நடைபெறுவதாக பல தரப்புகளில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதாவது, ரேஷன் கடைகளில் உள்ள அரசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதை தடுக்க அரசு தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மிக்ஸ் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் அளித்திருந்தது.

எனினும் தொடர்ந்து உணவு பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் இதனை தடுக்கும் விதமாக அரசு மூட்டைகளில் க்யூ ஆர் கோடை அச்சிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டு உள்ளது என தெரிந்து கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.