பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ..முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை:கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்திய அளவில் தமிழகம் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த 2 ஆண்டில் மட்டுமே பல்வேறு பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்க திட்டத்திற்கான முதலீட்டினை தமிழகத்தில் துவங்கியுள்ளனர்.

இந்த பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக 400க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பினை அளிக்கும் வகையிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


மேலும் இது மட்டுமல்லாமல், இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு உலக தரப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை அமைத்து வருவதாகவும், குறைந்த செலவு மற்றும் நிலையான சரக்கு போக்குவரத்தினை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மேம்படுத்தி வருவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டிலும் புதிதாக தமிழகத்தில் முதலீடு ஈர்க்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப பணி மேற்கொள்ளப்படுவதாகவும், பொருளாதாரத்தில் தமிழகத்தை அடுத்து நிலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்தில் கூறியுள்ளார்.