தமிழ்நாடு தான் டாப் !!

இந்திய: நாட்டிலேயே தமிழ்நாடு தான் டாப் .. முதலிடம் பிடித்த தமிழ்நாடு . பட்டியலை வெளியிட்ட நிதியமைச்சர். நாட்டில் வணிக சீர்த்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைபடுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர் திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார்.

அவ்வாறு வெளயிட்டுள்ள பட்டியலில் முதன்மையான மாநிலங்களில் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இதற்கு அடுத்து ஆந்திரா, அரியானா, குஜராத் மற்றும் கர்நாடக உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் இடம் பெற்று உள்ளன. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்டியலை வெளயிட்டார்.