தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும்

இந்தியா: மீண்டும் கனமழை .... மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் பெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கியது.

இதனை அடுத்து பருவமழை தொடங்கிய முதல் மழைப்பொழிவின்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதைத்தொடர்ந்து இடையில் சில நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2-வது மழைப்பொழிவு தொடங்கியது.

இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தகவல்

இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. என்வே தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.