இன்று தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: இன்றைய வானிலை நிலவரம் ...தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியின் மாம்பழத்துறையாறு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை அளவு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

அதேபோன்று ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அக்டோபர் 5-ம் தேதியான இன்று முதல் 11ம் தேதி வரை


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையயம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை அறிக்கையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.